அமர்நாத் பனி லிங்க தரிசனம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு: கோடிக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசம்
அமர்நாத் பனி லிங்க தரிசனம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.;
புதுடெல்லி,
கொரோனா காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடந்த சில மாத காலமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், காஷ்மீர் அமர்நாத் குகைக் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை, ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். ஆனால், இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புனித யாத்திரை தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் பக்தர்கள் பனி லிங்க தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக, பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், அமர்நாத் குகைக்கோவிலின் நிர்வாகமும் அம்மாநில அரசும் இணைந்து அமர்நாத் கோவிலின் பனி லிங்க தரிசனத்தை உலக பக்தர்கள் அனைவரும் காணும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது.
அமர்நாத் பனி லிங்க ஆரத்தி மற்றும் தரிசனம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது, வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இமயமலையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தப் பனி லிங்க ஆரத்தி மற்றும் தரிசனத்தை கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் கண்டு பரவசம் அடைந்தனர்.
இந்த நிகழ்வில், ஜம்மு-காஷ்மீர் கவர்னர் ஜி.சி முர்மு தலைமை ஏற்று அமர்நாத் பனி லிங்கத்திற்கு சிறப்பு ஆரத்தி செய்தார். 7-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு ஆரத்தி சேவை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.