அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே புதிய சட்டம்
அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
சண்டிகார்:
தனியார் துறை வேலைகளில் மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா ஒன்றை கொண்டுவருவதற்கான திட்டத்திற்கு அரியானா அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த அவ்ரைவு மசோதா அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள் சபை முன் வைக்கப்படும். பாஜக கூட்டணி கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜன்னாயக் ஜனதா கட்சி, தேர்தல்களில், முக்கியமாக தனியார் துறை வேலைகளில், மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்திருந்தது.
அதன்படி அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து இதற்கு அமைச்சரவை ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளது. இது அரியானா மாநில இளைஞர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று துஷ்யந்த் கூறியுள்ளார்.
கூட்டத்திற்குப் பிறகு, சவுதாலா, இன்று அரியானாவின் இளைஞர்களுக்கு ஒரு வரலாற்று நாள், ஏனெனில் இப்போது தனியார் துறை தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் அரியானாவின் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைகளை வழங்குவது கட்டாயமாக இருக்கும்" என கூறினார்