பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நேபாள ஆளும் கட்சி நிலைக்குழு கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு நாளை கூடும் என அறிவிப்பு
நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையில் தேசிய கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது.
காத்மாண்டு,
நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையில் தேசிய கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
கட்சியின் நிலைக்குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயலக உறுப்பினர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் பிரதமர் மற்றும் கட்சி தலைவர் பொறுப்புகளில் இருந்து கே.பி.சர்மா ஒலி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே கே.பி.சர்மா ஒலியை பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பது தொடர்பாகவும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் திடீரென இந்த கூட்டம் திங்கட்கிழமைக்கு (அதாவது நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி நேற்று நடைபெற இருந்த கட்சியின் நிலைக்குழு கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கட்சி நிலைக்குழு கூட்டம் எதற்காக ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் இல்லை.