பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டாயம் தேர்வுகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-06 15:55 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மார்ச் 24ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டன. இதனால் தேர்வுகள் அனைத்தும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

எனினும் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் சில மாநிலங்களில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டு இருந்த நிலையில் மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலையில் சில பல்கலைக்கழங்கள் இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தன. இந்த சூழ்நிலையில், தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ககாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி தேர்வுகளை நடத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.

மேலும் செய்திகள்