40 இணையதளங்களுக்கு தடை - மத்திய அரசு நடவடிக்கை

தடை செய்யப்பட்ட அமெரிக்க சீக்கிய அமைப்பின் 40 இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

Update: 2020-07-05 18:49 GMT
புதுடெல்லி,

அமெரிக்காவை மையமாக கொண்டு ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. காலிஸ்தான் ஆதரவு அமைப்பான இந்த அமைப்பின் சட்ட விரோத நடவடிக்கைகளால் மத்திய அரசு இந்த அமைப்பை கடந்த ஆண்டு தடை செய்தது. தற்போது இந்த அமைப்பின் 40 இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘உபா சட்டம் 1967-ன் கீழ் தடை செய்யப்பட்ட சட்ட விரோத அமைப்பான நீதிக்கான சீக்கியர்கள், சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக ஆதரவாளர்களை திரட்டுவதற்கான வேலைகளை நடத்தி வருகிறது. எனவே மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த அமைப்புடன் தொடர்புடைய 40 இணையதளங்களை இந்திய ஐ.டி. சட்டம் 2000, பிரிவு 69-ன் கீழ் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்