கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம்: டெல்லி துணை முதல் மந்திரி
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்று டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் மராட்டியமும், அதற்கு அடுத்த இடத்தில் தமிழகமும் மூன்றாம் இடத்தில் டெல்லியும் உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய திட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்க முடிவு செய்துள்ளதாக என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவிடம் டுவிட்டர் மூலமாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த மனிஷ் சிசோடியா கூறியதாவது:- கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அனைவரும் மருத்துவரின் அனுமதி பெற்று பிளாஸ்மா தானம் செய்யலாம். டெல்லியில் எந்த இடத்தில் இருந்தாலும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரலாம். இது தொடர்பாக விரிவான நடைமுறைகளும் தொலைபேசி எண்களும் நாளை வெளியிடப்படும். வெளியிடப்படும் தொலபேசி எண்களை தொடர்பு கொண்டு பிளாஸ்மா தானம் செய்ய முன் வரலாம்” என்றார்.