டெல்லியில் மேலும் 2,909 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் மேலும் 2,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-22 17:49 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. 

தலைநகர் டெல்லியிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் இன்று ஒருநாளில் மட்டும் 2,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் டெல்லியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,655 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதிப்பால் மேலும் 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  மொத்த இறப்பு எண்ணிக்கை  2,233 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்