நாம் ஒன்றாக நின்று சீனாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய தருணம் இது- மன்மோகன் சிங்
ஒரு தேசமாக நாம் ஒன்றாக நின்று சீனாவின் வெட்கக்கேடான அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய தருணம் இது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கூறி உள்ளார்.;
புதுடெல்லி
எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் தனது பேச்சுக்கள் மற்றும் அறிவிப்புகளின் தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்.
இது குறித்து மன்மோகன் சிங் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நமது அரசாங்கத்தின் முடிவுகளும் செயல்களும் வருங்கால சந்ததியினர் நம்மை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதில் தீவிரமான தாக்கங்களைக் கொண்டிருக்கும். எங்களை வழிநடத்துபவர்கள் ஒரு புனிதமான கடமையில் உள்ளவர்கள் ஆவார்கள்.
நமது ஜனநாயகத்தில் அந்த பொறுப்பு பிரதமர் பதவிக்கு உள்ளது. பிரதமர் தனது பேச்சின் தாக்கங்கள் மற்றும் நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய மற்றும் பிராந்திய நலன்களைப் பற்றிய அறிவிப்புகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சீனா வெட்கமின்றி சட்டவிரோதமாக இந்திய பகுதிகளான கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பங்கோங் த்சோ ஏரி போன்ற பகுதிகளில் ஏப்ரல் 2020 க்கு இடையில் பல ஊடுருவல்களை மேற்கொண்டு இன்று வரை உரிமை கோர முயல்கிறது. அச்சுறுத்தல்களால் நாம் பாதிக்கப்பட மாட்டோம் நாம் பிராந்திய ஒருமைப்பாட்டுடன் சமரசம் செய்ய அனுமதிக்க முடியாது.
பிரதமர் தனது பேசுக்களால் தங்கள் நிலைப்பாட்டை நிரூபிக்க பயன்படுத்த அனுமதிக்க முடியாது, மேலும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் அதை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தவறான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது. கர்னல் பி. சந்தோஷ் பாபு மற்றும் இறுதி தியாகம் செய்த நமது ராணுவவீரர்களுக்கு நீதியை உறுதிசெய்து, நமது பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்கும் வகையில், பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். குறைவானதைச் செய்வது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு செய்யும் வரலாற்று துரோகமாகும் எனறு கூறி உள்ளார்.
This is a moment where we must stand together as a nation and be united in our response to this brazen threat: Press Statement by Former PM Dr. Manmohan Singh pic.twitter.com/qP3hN3Od9D
— Congress (@INCIndia) June 22, 2020