காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

Update: 2020-06-20 13:56 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் லிக்டி போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படை மற்றும் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.  இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டு கொண்டனர்.  இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளான்.  அவனை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்