ஜோதிராதித்ய சிந்தியா கொரோனாவில் இருந்து மீண்டார் - முதல்-மந்திரி சிவராஜ் சவுகான் மகிழ்ச்சி

ஜோதிராதித்ய சிந்தியா கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். இதற்கு மத்தியபிரதேச முதல்மந்திரி சிவராஜ் சவுகான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-16 22:00 GMT
போபால், 

காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரின் தாய் மாதவி ராஜே சிந்தியா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு ஜோதிராதித்ய சிந்தியா கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். இதற்கு மத்தியபிரதேச முதல்மந்திரி சிவராஜ் சவுகான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “நாட்டின் மற்றும் மாநிலத்தின் பிரபலமான தலைவரும் எனது சகோதரருமான ஜோதிராதித்யா சிந்தியா முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஜோதிராதித்யாவின் தாயாரின்ன் உடல்நலம் விரைவில் மேம்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்