ஆனி மாத பிறப்பையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை - பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ஆனி மாத பிறப்பையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Update: 2020-06-15 20:34 GMT
திருவனந்தபுரம், 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பையொட்டியும், நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் பூஜை நடைபெறும். அதன்படி, ஆனி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து, தீபாராதனை காட்டினார். வேறு எந்த பூஜையும் நடைபெறவில்லை.

நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. காலை 10 மணி வரை பூஜைகள் நடைபெற்றன. மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடந்தது. கொரோனா காரணமாக சாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் செய்திகள்