கொரோனா பிரச்சனை நீண்ட காலம் நீடிக்காது - நிதின் கட்கரி நம்பிக்கை
கொரோனா பிரச்சனை நீண்ட காலம் நீடிக்காது என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய் தற்போது அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு உலக நாடுகளிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் சமூக விலகல், கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் கிருமியானது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்வதால் இதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி இன்று காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசிய நிகழ்ச்சி ஒன்றில், கொரோனா வைரஸ் நோய் பிரச்சனை நீண்ட காலம் நீடிக்காது என்றும் விரைவில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறினார்.
நமது விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க அயராது உழைத்து வருவதாகவும் விரைவில் கொரோனா பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.