மோட்டார் வாகன ஆவணங்கள் செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லும் - நிதின் கட்காரி அறிவிப்பு
பிப்ரவரி மாதம் முதல் காலாவதி ஆன மோட்டார் வாகன ஆவணங்கள் செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லும் என்று நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், கடந்த பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து காலாவதி ஆன மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்காமல் இருந்தால், அவை ஜூன் 30-ந் தேதிவரை செல்லும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில், இந்த ஆவணங்கள் செல்லும் காலம் செப்டம்பர் 30-ந்தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று அறிவித்தார்.
மோட்டார் வாகனங்களின் அனைத்து வகையான பெர்மிட்கள், தகுதி சான்றிதழ், பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.