இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள் 10,000-யை நெருங்கியது; 8 நாட்களில் 75 ஆயிரம் பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள் 10,000-யை நெருங்கி. உள்ளது. கடந்த 8 நாட்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் உச்சத்தை எட்டவில்லி ஆனால் ஜூன் முதல் வாரம் கடந்து விட்டதால், நாட்டில் கொரோனா நிலைமை மேலும் மோசமாகும் என்ற அச்சம் உள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் வீதம் இப்போது அதிகரித்துள்ளது. ஜூன் தொடக்கத்தில் இருந்து, ஒவ்வொரு நாளும் சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்று பதிவாகி வருகின்றன.
கடந்த 7 நாட்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், புதிதாக 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பதிவாகியுள்ளன. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கொரோனா தொற்று மிக விரைவாக பரவி வருவது மாநில அரசுகளுக்கு பெரும் பதற்றத்தைத் ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் நோயாளி ஜனவரி 30 அன்று கண்டுபிடிக்கப்பட்டார். பாதிப்பு 100 எண்ணிக்கையை அடைய மார்ச் 15 வரை ஆனது. அடுத்த 64 நாட்களில், கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. அதாவது, இந்தியாவில் ஒரு லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட 109 நாட்கள் ஆனது.
கடந்த 31 ந்தேதி 5 வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு நோய்தொற்று வேகமாக அதிகரிக்கத் தொடங்கின. ஜூன் 2 ஆம் தேதி, நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது. அடுத்த 5 நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோயாளிகளாக மாறினார்கள். தற்போது நாட்டில் 2.66 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்று உள்ளன. கடந்த இரண்டு நாட்களில் இருந்து 20,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
கடந்த 8 நாட்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
அதிக பட்ச உயர்வாக கடந்த 24 மணிநேரத்தில் 9987 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. கடந்த 7 நாட்களாக ஒவ்வொரு நாளும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
தேதி | மொத்த நோய் தொற்று |
30 ஜனவரி 2020 | 1 |
15 மார்ச் 2020 | 100 |
14 ஏப்ரல் 2020 | 10,000 |
7 மே 2020 | 50,000 |
19 மே 2020 | 1,00,00 |
27 மே 2020 | 1,50,000 |
2 ஜூன் 2020 | 2,00,000 |
9 ஜூன் 2020 | 2,66,598 |
கடந்த 24 மணி நேரத்தில் 9987 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 331 இறப்புகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
129917 செயலில் உள்ள பாதிப்புகள் உள்பட, இப்போது நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 266598 ஆக உள்ளது,
129215 குணமடைந்து உள்ளனர். மொத்தம் 7466பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக தெரிவித்து உள்ளது.