கொரோனாவுக்கு துணை ராணுவ வீரர் பலி
கொரோனாவுக்கு துணை ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் மொரகாபாத்தை சேர்ந்தவர் துணை ராணுவப்படையில் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) உதவி செவிலியராக வேலை பார்த்து வந்தார்.
காஷ்மீரில் பணிபுரிந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 5-ந்தேதி தெரியவந்தது.
இதனையடுத்து காஷ்மீரில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
கொரோனாவால் இவரோடு சேர்த்து மொத்தம் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.