டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிக்கு கொரோனா

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2020-06-08 20:00 GMT
புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில் நிர்வசான் சதான் என்ற கட்டிடத்தில் தலைமை தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் உதவி பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மற்ற ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்