குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் திடீர் ராஜினாமா

குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலையொட்டி அம்மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேர் இன்று ராஜினாமா செய்தனர்.;

Update: 2020-06-04 12:20 GMT
காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது.  இந்நிலையில் முதல்-மந்திரி விஜய் ரூபானியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அக்ஷ்ய் படேல் மற்றும் ஜிது சௌதரி என்ற இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர்.

இதையடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ராஜேந்திரா திரிவேதியிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபை உறுப்பினர்களில், பாஜகவிற்கு 103 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 68 உறுப்பினர்களும் உள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு முக்கியம் என்பதால் காங்கிரஸ் பலத்தை குறைக்க எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா படலம் அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியை பாஜக உடைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் பாஜக தலைவர் அமின், கட்சித் தலைமை மீதான அதிருப்தி காரணமாக அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர். வரும் நாட்களில் மேலும் சிலர் ராஜினாமா செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

மேலும் செய்திகள்