கொரோனா ஒழிப்பில் ஈடுபடும் 50 ஆயிரம் டாக்டர்களுக்கு இலவச விமான டிக்கெட்
கொரோனா ஒழிப்பில் ஈடுபடும் 50 ஆயிரம் டாக்டர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
கொல்கத்தா,
கொரோனா என்ற கொடிய அரக்கனை அடியோடு அழிக்கும் பணியில் டாக்டர்கள் தன்னலம் கருதாமல் சேவை செய்து வருகிறார்கள். மருத்துவ சிகிச்சையால் கொரோனாவில் இருந்து பலர் மீண்டு வருகிறார்கள். அவர்களின் மருத்துவ சேவையை கவுரவப்படுத்தும் வகையில் ‘ஏர் ஏசியா’ விமான நிறுவனம் ‘ஏர் ஏசியா ரெட் பாஸ்’ என்ற புதிய பயண சலுகையை அறிவித்துள்ளது.
இதன்படி 50 ஆயிரம் டாக்டர்கள் இந்தியா முழுவதும் இலவசமாக விமான பயணம் மேற்கொள்ளலாம். ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை இந்த இலவச விமான சலுகையை பயன்படுத்தலாம். இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் டாக்டர்கள் தங்களை பற்றிய முழுவிவரங்களுடன் ஏர் ஏசியா இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.