ரெயில்வே தலைமை அலுவலகமான ரெயில்பவன் ஊழியருக்கு கொரோனா
ரெயில்வே தலைமை அலுவலகமான ரெயில்பவன் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
டெல்லியில் ரெயில்வே துறையின் தலைமை அலுவலகமான ரெயில்பவனில் பணியாற்றி வருகிற பன்னோக்கு ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் உடனடியாக சிகிச்சை பெற ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அவருடன் சேர்த்து 2 வாரங்களில் மொத்தம் 5 பேருக்கு ரெயில்பவனில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இப்போது தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர், ஒரு அதிகாரியிடம் இருந்து பிற அதிகாரிக்கு கோப்புகளை எடுத்துச்செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. இந்த கோப்புகள் ரெயில்வே மந்திரி வரை செல்ல வாய்ப்பு உண்டு என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
அவரோடு தொடர்பில் இருந்த 9 பேரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.