எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- இந்திய ராணுவம் தக்க பதிலடி

எல்லையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.;

Update: 2020-05-22 08:17 GMT
பூஞ்ச்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா செக்டாரில் உள்ள கிருஷ்ணகாதி பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.  அதிகாலை 3.30 மணியளவில் இருதரப்புக்கும் இடையேயான மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் யாருக்கும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. 

மேலும் செய்திகள்