மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 12 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
இதுகுறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 5 நாட்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். ‘சுயசார்பு இந்தியா’ என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படையாக கொண்டது என்று அவர் கூறினார்.
இந்நிலையில் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி இந்திய மாநிலங்களுக்கான மே மாத பங்குத் தொகையாக 46 ஆயிரத்து 38 கோடி ரூபாய் நிதி பகிர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 1,928 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 8,255 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.