உம்பன் புயல்: மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக்குடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு

முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் ஆகியோருடன் அமித்ஷா தொலைபேசியில் பேசினார். உம்பன் புயல் தாக்குதலை சமாளிக்க மத்திய அரசு உதவும் என்று உறுதி அளித்தார்.;

Update: 2020-05-19 23:30 GMT
புதுடெல்லி, 

வங்காள விரிகுடாவில் உம்பன் புயல், நேற்று முன்தினம் அதிதீவிர புயலாக உருவெடுத்தது. அந்த புயல், மேலும் தீவிரமடைந்து, இன்று பிற்பகலில் மேற்கு வங்காளத்தின் டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹடியா தீவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அப்போது, மணிக்கு 195 கி.மீ. வேகம் வரை புயல் வீசும் என்று தெரிகிறது. 

இதனால், மேற்கு வங்காளத்தின் கரையோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டுவதுடன், பெருத்த சேதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அண்டை மாநிலமான ஒடிசாவின் கடலோர பகுதிகளிலும் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

மேற்கு வங்காளத்தில் புயல் நிலவரம் குறித்து ஆய்வு நடத்தினார். புயலால் உண்டாகும் சூழ்நிலையை சமாளிக்க சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அமித்ஷா உறுதி அளித்தார்.

இதுபோல், ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தார்.

மத்திய அரசு தேவையான எல்லா உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்