கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பினராயி விஜயன் தகவல்
கேரளாவில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில், 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 8 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் கேரளாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 642 ஆகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 124 ஆகவும் உள்ளது.