மராட்டியத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மராட்டியத்தில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-17 09:19 GMT
மும்பை,

கொரோனாவால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.  

இந்தநிலையில் புதிய வழிமுறைகளுடன் ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிக்கப்படும்? என்பது பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகிறது. 4-வது கட்ட ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிகிறது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மராட்டியத்தில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவது கடைபிடிக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடியவுள்ள நிலையில் மராட்டிய அரசு ஊரடங்கை  நீட்டித்துள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் இதுவரை 30,706 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்