இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.
நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில், இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927 உயர்வடைந்துள்ளது.
34,109 பேர் குணமடைந்தும், 2,872 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 30,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 7,088ஆக உயர்வு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,135ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.