வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு

2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.

Update: 2020-05-13 12:15 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

* 2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. 
* வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் வரை நீட்டிப்பு
*நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைப்பு
*இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50000 கோடி  அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும்.


* அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை முடிக்க 6 மாத காலம் கூடுதல் அவகாசம்.
*சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வங்கி உத்தரவாத தொகையை அரசு நிறுவனங்கள் விடுவிக்கலாம்
*தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்துவது அடுத்த 3 மாதங்களுக்கு மேல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

*சிறு குறு தொழில் உலக அளவிலான டெண்டர் நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
* சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின்னணு சந்தை இணைப்பு வழங்கப்படும்.
*மின்வாரியங்ளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்
* தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.

மேலும் செய்திகள்