மும்பை தாராவியில் புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை தாராவியில் புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-11 15:51 GMT
மும்பை, 

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் தாராவியில் இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 916 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது. 

மேலும் தாராவியில் உள்ள, 90 அடி சாலை, அபுபக்கர் சால், தாராவி குறுக்கு சாலை, பி.வி.சால், தோபி காட், கவுதம் சால், முஸ்லீம் நகர், சாஸ்திரி நகர், தோர்வாடா, குட்டிவாடி மற்றும் சில பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று இன்று பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்