முன்னாள் முதல்வர் முலாயம்சிங் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.;
லக்னோ
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் உடல் நலக்கோளாறு காரணமாகநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முலாயம் சிங் ஐந்து நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக புதன்கிழமை, யாதவ் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார், ஆனால் மூத்த தலைவரின் வயிறு மற்றும் சிறுநீர் தொடர்பானசிகிச்சைக்காக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அனுமதிக்கப்பட்டார் என்று சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி தெரிவித்தார்.
முலாயம்சிங் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இருப்பினும், வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக மீண்டும் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முலாயமின் தம்பியும் பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சியின் (லோஹியா) தலைவருமான சிவ்பால் சிங் யாதவ் தனது டுவிட்டரில்
கடந்த 2-3 நாட்களாக, நம் அனைவருக்கும் உத்வேகம் மற்றும் ஆற்றலாக விளங்கும் முலாயம் சிங் யாதவின் உடல்நலம் குறித்து பல நலம் விரும்பிகள் கவலைப்பட்டனர். கடவுளின் கிருபையால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அவர் நீண்ட காலம் வாழ்வார், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்,
தலைவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.