கர்நாடகா திரும்பும் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும்- அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு

வெளியிடங்களில் இருந்து கர்நாடகாவுக்கு வரும் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-05-10 16:15 GMT
பெங்களூரு,

ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், வெளிநாடுகளிலிருந்து  நாடு திரும்ப முடியாமல் தவித்தவர்களையும் அழைத்து வரும் பணி தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கர்நாடகா மாநிலம் திரும்பும் அனைவரையும்  14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், ”தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருக்கும் தங்க வைக்கும் வசதியை பொறுத்தே, வெளி மாநிலங்களில்  சிக்கியுள்ள பயணிகள் கர்நாடகா வர அனுமதிக்கப்படுவர்.   

கிராம மக்களின் பாதுகாப்பு கருதி, வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கிராமங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படமாட்டாது. இதற்கு பதிலாக அவர்கள் 14 நாட்கள் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 

வெளி மாநிலங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்தாலும், கர்நாடகாவிலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும்” என்றும் எடியூரப்பா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்