மும்பை பைகுல்லா சிறையில் பெண் கைதிக்கு கொரோனா

மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-10 11:49 GMT
மும்பை,

மும்பையில் உள்ள பைகுல்லா சிறைச்சாலையில் பெண் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சிறை அதிகாரி கூறியதாவது:- “ பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள  54- வயது பெண் கைதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஆக்சிஜன் அளவு  90 சதவிகிதமாக குறைந்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கபட்டார். 

அங்கு நடத்திய சோதனையில், கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  தற்போது அப்பெண் கைதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.  

மும்பை பைகுல்லா சிறையில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு நேற்று முன் தினம்  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்