இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 195 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1568 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12727 - ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 27.41 சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 14 ஆயிரத்து 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் 5,804 பேரும், டெல்லியில் 4,898- பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.