இன்ஸ்டாகிராம் குழுவில் ஆபாச கருத்து- சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்ட பிளஸ் 1 மாணவர்கள்

இன்ஸ்டாகிராம் குழுவில் பாயிஸ் லாக்கர் ரூம் குழுவில் ஆபாச கருத்துக்களுடன் சிறுமிகளின் ஆபாச படங்களை அனுமதியின்றி வெளியிட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2020-05-05 09:29 GMT
புதுடெல்லி

தலைநகர் புதுடெல்லியில் வசதி மிக்கவர்கள் படிக்கும் பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் 'பாய்ஸ் லாக்கர் ரூம் ' என்ற குழு உருவாக்கி அக்குழுவில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் வகுப்பு தோழிகள் மற்றும் சிறுவயது பெண்களின் நிர்வாண படங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதுடன்  படங்களுக்கு மதிப்பெண்ணும் வழங்கி வந்துள்ளனர். நாட்டை அதி்ர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக டில்லி ஷாகேட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே இவர்கள் தங்களுக்குள் வைத்திருந்த ஸ்கிரீன் ஷாட்டுகள் தெற்கு டில்லியை சேர்ந்த பெண் ஒருவர் மூலம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்நிலையில் தெற்கு டில்லியில் வசித்து வரும் 15 வயது பள்ளி மாணவனை பிடித்து டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் ஒரு மாணவன் தான் புகைப்படம், மெசேஜ்களை பலருக்கும் பகிர்ந்து சாட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சில பள்ளி மாணவர்கள் மீது வழக்கு  பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் தீவிரமாக இருந்த 20 சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களது மொபைல் போனை டெல்லி காவல்துறையின் சைபர் செல் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்தக் குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது  இன்ஸ்டாகிராம் மற்றும் டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சிறுவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் மீது வலுவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்