மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-04-05 06:32 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில்  மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். 

புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 26 பேரில், 17 பேர் புனேவைச்சேர்ந்தவர்கள் ஆவர்.  மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். 52 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

மேலும் செய்திகள்