இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-13 17:24 GMT
புதுடெல்லி,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது கோரத்தாண்டவத்தை தொடங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கர்நாடகம், மராட்டியம், கேரளா உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரசால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் 69 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனை டெல்லி அரசும் உறுதி செய்துள்ளது. இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

முன்னதாக கர்நாடக மாநிலத்தில் 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்தார். இதை கர்நாடக சுகாதாரத்துறையும் உறுதிப்படுத்தியது.


மேலும் செய்திகள்