கொரோனா எதிரொலி : பிரதமர் மோடியின் குஜராத் 2 நாள் பயணம் தள்ளி வைப்பு

கொரோனா எதிரொலியாக பிரதமர் மோடியின் குஜராத் நாள் பயணம் தள்ளிவைக்கப்படுவதாக மாநில துணை முதல்–மந்திரி நிதின் படேல் அறிவித்துள்ளார்.

Update: 2020-03-13 16:22 GMT
காந்திநகர்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21 மற்றும் 22–ந் தேதிகளில் குஜராத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக மாநில துணை முதல்–மந்திரி நிதின் படேல் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 

‘‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பெரிய கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்துவதை தவிர்க்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையிலேயே பிரதமர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிகள் எந்த தேதிகளில் நடைபெறும் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்