தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை சீர்குலைப்பதா? - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை சீர்குலைப்பதா என்று பிரதமர் மோடியிடம், ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-03-11 21:30 GMT
புதுடெல்லி,

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி, தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை சீர்குலைப்பதில் மும்முரமாக இருக்கிறார். அதனால், கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை அவர் கவனிக்க தவறி இருக்கலாம். பெட்ரோல் விலையை லிட்டருக்கு 60 ரூபாய்க்கு கீழ் குறைப்பதன் மூலம், இந்த பலன்களை பொதுமக்களுக்கு அளிக்கலாமே? அது, ஸ்தம்பித்து நிற்கும் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட உதவும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்