அடுத்த ஆண்டு தேர்தலில் வெற்றிபெற இலக்கு: மேற்குவங்காள பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அந்த மாநில பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநிலம் நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 295 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 211 தொகுதிகளில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் அரசு அமைந்துள்ளது. பா.ஜனதா 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 45 சதவீதமும், பா.ஜனதா 10 சதவீதமும் ஓட்டுகள் பெற்றன. அதேசமயம் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 44 சதவீதமும், பா.ஜனதா 40 சதவீதமும் ஓட்டுகளை பெற்றன. கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு குறைந்து, பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
ஆனால் மேற்கு வங்காளத்தில் மட்டும் பா.ஜனதாவால் காலூன்ற முடியவில்லை. எனவே அடுத்த ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா குறிவைத்துவிட்டது. இதன்மூலம் மாநில அரசை கைப்பற்றுவதுடன், அதிகமான மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறலாம், மாநிலங்களவை உறுப்பினர்களும் அதிகம் கிடைப்பார்கள் என பா.ஜனதா கருதுகிறது.
மம்தா பானர்ஜி, சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் கடுமையாக போராடி வருகிறார். எனவே வங்காள மொழி பேசும் இந்துக்களை கருத்தில்கொண்டு ‘இந்துத்துவா மற்றும் வளர்ச்சி’ என்ற இலக்குடன் அந்த கனவை நிறைவேற்ற பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இந்த வாய்ப்பை பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்தின் மீது வைத்திருக்கும் குறிக்கு பயன்படுத்திக் கொண்டார். பிரதமர் மோடி நேற்று அந்த மாநிலத்தின் பல எம்.பி.க்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
மாநிலத்தில் வெற்றிபெறுவதற்கு பா.ஜனதா என்ன செய்ய வேண்டும். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகள் ஆகியவை குறித்து அங்குள்ள மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது போன்ற பல விவரங்களை அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இதுகுறித்து பிரதமரை சந்தித்த பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் கூறும்போது, “பிரதமர் மோடி ஒவ்வொரு எம்.பி.யையும் சந்திக்க முடிவு செய்துள்ளார். அவர் பல்வேறு அரசியல் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். இது எங்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது” என்றார்.
மக்களவையில் அதிக குரல் எழுப்பும் லாக்கெட் சட்டர்ஜி எம்.பி. கூறும்போது, “மேற்கு வங்காள மாநிலத்தில் வெற்றிபெறுவதற்கு பா.ஜனதா என்ன செய்ய வேண்டும். மத்திய அரசு பற்றியும், அதன் திட்டங்கள் குறித்தும் அங்குள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பிரதமர் கேட்டார்” என்றார்.
உள்துறை மந்திரி அமித்ஷாவும் மேற்கு வங்காளத்தில் வெற்றிபெற தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என தெரிகிறது. ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் மாதம் 3 முறையாவது மேற்கு வங்காளத்துக்கு வருவேன் என்று அமித்ஷா கட்சியினரிடம் கூறியுள்ளதாக திலீப் கோஷ் தெரிவித்தார்.