கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் அனுமதி
கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் இத்தாலி சென்று வந்ததை மறைத்துள்ளனர். அவர்கள் வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்,
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 97 நாடுகளில் பரவி விட்டது. 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில், 34 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் 5 பேரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.
இந்தியாவில் கேரளாவில்தான் முதன்முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 3 பேரும், சீனாவில் உகான் நகரில் மருத்துவம் படித்து வருபவர்கள். பிறகு அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டிய காலமும் முடிந்து விட்டது.
இந்த நிலையில்தான், கேரளாவில் மேலும் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி பகுதியை சேர்ந்தவர்கள்.
அவர்களில் 50 வயதை கடந்த கணவன், மனைவி, அவர்களின் 24 வயதான மகன் ஆகியோர் இத்தாலி சென்று திரும்பி உள்ளனர். அதனால் அவர்களுக்கும், அவர்களின் உறவினர்கள் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரங்களை கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
பெற்றோர், மகன் என 3 பேரும் கடந்த மாதம் 29-ந் தேதி இத்தாலி நாட்டின் வெனீஸ் நகரில் இருந்து தோஹா நகருக்கு விமானத்தில் நள்ளிரவு 11.30 மணிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஒன்றரை மணி நேரம் இருந்து விட்டு, மற்றொரு விமானத்தில், மறுநாள் காலை 8.20 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.
ஆனால், விமான நிலையத்தில், கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்துவதை தவிர்த்து விட்டனர். ஒரு தனியார் காரில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இதற்கிடையே, அவர்களுடைய உறவினர்கள் 2 பேர், வைரஸ் அறிகுறிகளுடன் தனியார் மற்றும் தாலுகா ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெற சென்றனர். சுகாதார அதிகாரிகள் தகவல் அறிந்து விசாரித்தபோது, 3 பேர் இத்தாலி சென்று விட்டு திரும்பியது தெரிய வந்தது.
அவர்கள் வீட்டுக்கு சென்றபோது, அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் இருந்தனர். முதலில், சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் அவர்களை வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியதாகி விட்டது.
5 பேரும் 6-ந் தேதி பத்தனம்திட்டா பொது மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். 7-ந் தேதி இரவு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. அந்த குடும்பத்தை சேர்ந்த 2 முதியோர், முன்னெச்சரிக்கையாக கோட்டயம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி சென்று திரும்பிய குடும்பத்தினர், தாங்கள் சென்று வந்ததை அதிகாரிகளிடம் மறைத்துள்ளனர். இதுபோன்ற பழக்கத்தை குற்றமாக கருத வேண்டும். ஈரான், இத்தாலி, தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதுபோல், இத்தாலி சென்று திரும்பிய 3 பேர் பயணம் செய்த விமானங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளோம். அவர்களுடன் பயணம் செய்தவர்கள், உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.
9-ந் தேதி (இன்று) ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடக்கும்நிலையில், 5 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கிய தகவல் வெளியாகி உள்ளது. திருவிழாவில், ஆயிரக்கணக்கான பெண்களும், வெளிநாட்டினரும் ஒன்றாக திரளுவார்கள்.
இருப்பினும், கவலைப்பட வேண்டியது இல்லை. வைரஸ் அறிகுறிகளுடன் இருப்பவர்கள், விழாவுக்கு வராமல் இருந்தால் போதும். அத்தகையவர்கள் பங்கேற்காமல் இருப்பதை தேவஸ்தான அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
கோவில் அருகே மருத்துவ முகாம் அமைக்கப்படும். ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்படும். பொங்கல் கொண்டாட்டங்கள், வீடியோ எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
கேரளாவில், 5 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
அருணாசலபிரதேசத்துக்குள் வெளிநாட்டினர் நுழைய சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த அனுமதியை நிறுத்தி வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக, காஷ்மீரில் ஸ்ரீநகரில் உள்ள ஞாயிறு சந்தை நேற்று மூடப்பட்டு இருந்தது.
மணிப்பூரில் ஹோலியை உள்ளடக்கி, ‘யவோஷாங்’ என்ற பெயரில் 5 நாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், பெருமளவில் கூடாமல் அமைதியாக கொண்டாடுமாறு முதல்-மந்திரி பிரேன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.