மேகாலயா தலைநகரில் ஊரடங்கு வாபஸ்

மேகாலயா தலைநகரில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

Update: 2020-03-08 19:48 GMT
ஷில்லாங்,

மேகாலயா மாநிலம் இச்சாமடி கிராமத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி குடியுரிமை சட்ட எதிர்ப்பு கூட்டம் நடத்தியதில், பழங்குடியினருக்கும், பழங்குடியினர் இல்லாதோருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் அடுத்தடுத்து 3 பேர் பலியானார்கள். அதைத்தொடர்ந்து, தலைநகர் ஷில்லாங் உள்பட சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ஒரு வாரம் கடந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஷில்லாங்கில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், சோரா, ஷெல்லா ஆகிய இடங்களில் ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. நிலைமையை கண்காணித்து வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்