கொரோனா எதிரொலி; தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை மேற்கொள்கிறது - இந்திய ராணுவம்

கொரோனா எதிரொலியால் தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை இந்திய ராணுவம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2020-03-06 11:08 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31ஆக உள்ளது. டெல்லியை சேர்ந்த நபர் , தாய்லாந்து சென்றிருந்த நிலையில், அவருக்கு மலேசியாவில் நடந்த சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், மக்கள் ஓரிடத்தில்  கூட்டமாக திரள்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதை மீறி ஓரிடத்தில் கூட்டமாக திரண்டால் அதை ஒருங்கிணைப்பவர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  கொரோனா எதிரொலியால் தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை இந்திய ராணுவம் மேற்கொள்ள உள்ளது. 1,500 நபர்கள் வரை தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, 

மேலும்  தனிமைப்படுத்துவதற்கான இடங்களாக சென்னை, ஜெய்சால்மர், செகந்திராபாத், கொல்கத்தா,சூரத்கர்,ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்