பெண் சக்தியே நாட்டை பாதுகாக்கிறது; பிரதமர் மோடி புகழாரம்
பிரதமர் மோடி, முன்னுதாரணமாக திகழும் பெண்களை பற்றிய விவரங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-;
புதுடெல்லி,
பெண் தொழில்முனைவோர் நமக்கு உத்வேகம் அளிக்கின்றனர். பெண் சக்தி, இந்தியாவை பாதுகாக்கிறது. விளையாட்டு, தலைமை பொறுப்பு என பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்த பங்களிப்பை செய்துள்ளனர்.
அபூர்வமான பெண் சாதனையாளர்கள் பற்றிய உத்வேகம் அளிக்கும் செய்திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற மேலும் பல செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.