கொரோனா வைரஸ்: நாடு முழுவதும் 28,529 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் - சுகாதாரத்துறை மந்திரி தகவல்
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் 28,529 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் தகவல் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி
மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ வர்தன் கொரோனா வைரஸ் குறித்த அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கு முன்னரே ஜனவரி 17 ந்தேதி முதல் இந்தியா தேவையான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டது.
மார்ச் 4 ஆம் தேதி வரை, இந்தியாவில் கொரோனா வைரஸால் 29 பேர் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மார்ச் 4 ஆம் தேதி வரை மொத்தம் 28529 நபர்கள் சமூக கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் இப்போது உலகளாவிய சோதனை நடத்தப்பட உள்ளது.
நிலைமையை தொடர்ந்து நான் கண்காணித்து வருகிறேன். அமைச்சர்கள் குழுவும் நிலைமையை கண்காணித்து வருகிறது என கூறினார்.