15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி - மத்திய மந்திரி தகவல்

15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-02 19:07 GMT
புதுடெல்லி,

வெங்காயம் விலை அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அதன் ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.

விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 15-ந்தேதியில் இருந்து வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் கூறினார். இது, விவசாயிகளின் வருவாயை பெருக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்