காஷ்மீரில் ஆயுத உரிமம் வழங்கியதில் மோசடி: முன்னாள் கலெக்டர்கள் 2 பேர் கைது

காஷ்மீரில் ஆயுத உரிமம் வழங்கியதில் மோசடி செய்த முன்னாள் கலெக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-03-01 19:56 GMT
புதுடெல்லி,

காஷ்மீரின் குப்வாரா மாவட்ட கலெக்டராக கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ராஜீவ் ரஞ்சன் என்பவரும், 2013-2015 வரை இட்ரிட் ஹூசைன் ரபிகுய் என்பவரும் பணியாற்றினார்கள்.

இவர்களது பணிக்காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் ஏராளமான ஆயுத உரிமங்கள் வழங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி முன்னாள் மாவட்ட கலெக்டர்களான ராஜீவ் ரஞ்சன், இட்ரிட் ஹூசைன் ரபிகுய் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்