ஆற்றில் புனித நீராட சென்ற தலைமை நீதிபதி நூலிழையில் உயிர்தப்பினார்

ஆற்றில் புனித நீராட சென்ற உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நூலிழையில் உயிர்தப்பினார்.;

Update: 2020-03-01 10:36 GMT
டேராடூன்,

உத்தரகாண்ட்  மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன். இவர் தேவப்பிரயாகை நகரில் சங்கம் எனும் இடத்தில் நேற்று ஆற்றில் புனித நீராடினார். 

அப்போது திடீரென கால் தவறி அவர் ஆற்றில் விழ முயன்றார். உடனடியாக அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கி பிடித்து காப்பாற்றினர். இதனால் அவர் நீரில் விழாமல் நூலிழையில் உயிர் தப்பினார். 

இந்த இடத்தில் அலக்நந்தா மற்றும் பாகீரதி என்ற 2 ஆறுகள் ஒன்றாக இணைந்து கங்கையாக உருவெடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்