ஜவகர்லால் நேரு பல்கலைகழக வன்முறை : சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு

ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டது.

Update: 2020-01-10 12:13 GMT
புதுடெல்லி

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுங்களுடன்  புகுந்த மர்ம நபர்கள், பல்கலைக்கழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.  இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்க தலைவி  உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதை கண்டித்து நாடுமுழுவதும்  மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் வன்முறை நடந்து 4 நாட்கள் ஆகியுள்ள போதிலும்,  இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், டெல்லி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் தொடர்புடையவர்கள் பிடிபடுவார்கள் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்தநிலையில், ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடந்த  வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டது.

இது குறித்து துணை ஆணையர் டாக்டர் ஜாய் டிர்கி கூறும்போது,

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை குறித்து இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் சந்தேக நபர்களை விரைவில் விசாரிக்கத் தொடங்குவோம்.

அடையாளம் காணப்பட்டவர்களில் சுஞ்சுன் குமார், பங்கஜ் மிஸ்ரா, ஆயிஷ் கோஷ் (ஜே.என்.யு.எஸ்.யூ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்), வாஸ்கர் விஜய், சுசேதா தாலுக்ராஜ், பிரியா ரஞ்சன், டோலன் சாவந்த், யோகேந்திர பரத்வாஜ், விகாஸ் படேல் ஆகியோர் அடங்குவர் என கூறினார்.

மேலும் செய்திகள்