‘‘பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

‘‘பட்ஜெட்டுக்கு யோசனை கூறுங்கள்’’ என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2020-01-08 17:44 GMT
புதுடெல்லி, 

மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1–ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் யோசனை கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘‘மத்திய பட்ஜெட், 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதுடன், இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதை வகுக்கும். ஆகவே, இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு தங்களது கருத்துகளையும், யோசனைகளையும் ‘மைகவ்’ செயலியில் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதுபோல், மத்திய நிதி அமைச்சகமும் பொதுமக்களிடம் யோசனை கேட்டுள்ளது.

மேலும் செய்திகள்