அபிநந்தன் ரபேலில் சென்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும் : முன்னாள் விமானப்படை தளபதி

அபிநந்தன் ரபேல் போர் விமானத்தில் சென்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும் என்று முன்னாள் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-05 04:01 GMT
புதுடெல்லி,

மும்பை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விமானப்படை முன்னாள் தளபதி தனோவா கூறியதாவது: -  ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும். மற்ற கோப்புகளும் மெதுவான வேகத்தில் நகரத் தொடங்குகின்றன. 

அபிநந்தன் ரபேலில் சென்றிருந்தால் போரில் நிலைமை வேறாக இருந்திருக்கும். விமான கொள்முதலில் 10 ஆண்டு தாமதத்தால் ரபேலுக்கு பதில் மிக்-21ல் அபிநந்தன் பறக்க நேரிட்டது.   அதேவேளையில், வரி செலுத்துபவர்களின் பணம் என்பதால், போர் விமானங்களின் விலை பற்றி கேள்வி எழுப்ப மக்களுக்கு உரிமை உள்ளது” என்றார். 

முன்னதாக,  புல்வாமா தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது.  இதனைத் தொடர்ந்து,  இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் விமானப்படைக்கும் இடையே வானில் ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர்விமானத்தை அபிநந்தன், தான் இயக்கிய மிக் பைஸன் ரக விமானத்தால் சுட்டு வீழ்த்தி, பாகிஸ்தான் பகுதிக்குள் பாரசூட் மூலம் குதித்தார். இதையடுத்து அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான், இந்தியா உள்பட சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால்,  உடனடியாக விடுவித்தது.  

மேலும் செய்திகள்