ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் பலி விவகாரம்: ஸ்மிருதி இரானி நேரில் விசாரணை

ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 100 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

Update: 2020-01-03 10:26 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அதிக அளவில் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்பாக புகார்கள் அதிக அளவில் குவிந்ததால், குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

அதில் பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில், 

கோடாவின் ஜெ.கே.லோன் மருத்துவமனையில் 2014 ம் ஆண்டில் 1198 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. போதிய ஆக்சிஜன் இல்லாதது, தொற்று பாதிப்பு உள்ளிட்டவைகளே குழந்தைகள் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் போதிய மருத்துவ உபகரணங்கள் இருந்தாலும் டாக்டர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு காரணமாகவே குழந்தைகள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி  கோடாவின் ஜெ.கே.லோன் மருத்துவமனைக்கு சென்று குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தினார்.  

விசாரணை நடத்திய பின் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

குழந்தைகள் தொடர்ச்சியாக இறந்த பிறகும், ராஜஸ்தான் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இதற்காக அவர்கள் யாருக்கு அபராதம் விதிப்பார்கள்?  இது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்