சென்னை உள்பட 4 மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னை உள்பட 4 மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது.

Update: 2020-01-01 07:22 GMT
புதுடெல்லி,

மானியமற்ற எல்பிஜி  சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ஜனவரி 1, 2020 முதல் அதிகரித்து உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில், இந்த உயர்வு முறையே சிலிண்டருக்கு ரூ.19 மற்றும் ரூ .19.5 ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி 1 முதல், மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்  டெல்லியில் சிலிண்டருக்கு ரூ.714 ஆகவும், மும்பையில் சிலிண்டருக்கு ரூ .684.50 ஆகவும் உள்ளது.

டிசம்பரில், சிலிண்டருக்கு டெல்லியில் ரூ.695 ஆகவும்,  மும்பையில் ரூ .665 ஆகவும் விலை இருந்தது என்று இந்தியன் ஆயில் நிறுவன  வலைத்தளம் iocl.com தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில்  மானியமில்லாத  சிலிண்டருக்கு ரூ. 21.5 உயர்ந்து ரூ.747 ஆகவும்,  சென்னையில் ரூ.20 உயர்ந்து  ரூ .734 ஆகவும் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் முதல்  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.140 வரை அதிகரித்து உள்ளது.

மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை  கீழ்கண்டவாறு ஜனவரி 1, 2020 முதல் அமலுக்கு வருகிறது.

மெட்ரோ
நகரங்கள்

மானியமில்லாத 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் (ரூபாயில்)

ஜனவரி

டிசம்பர்

டெல்லி

714

695

கொல்கத்தா

747

725.5

மும்பை

684.50

665

சென்னை

734

714

(ஆதாரம்: iocl.com)

மேலும் செய்திகள்